2022 முதல் சேவையை தொடங்கும் புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்ட தேசிய போட்டி

புதுடெல்லி,: இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான பெயரை தேர்வு செய்வது மற்றும் அடையாள சின்னம் வடிவமைக்கும் போட்டியை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் சேவை வருகிற 2022ம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. முதல் கட்டமாக மும்மை- அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்.  புல்லட் ரயில் திட்டத்தை மேற்கொண்டு வரும் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், புல்லட் ரயிலுக்கான பெயரை தேர்வு செய்யவும், ரயிலின்  மீது அமைக்கப்பட உள்ள அடையாள சின்னத்தை தேர்வு செய்யவும் தேசிய அளவிலான போட்டியை அறிவித்துள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் மார்ச் 25ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளும்படி இந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. mygov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைன் போட்டி நடத்தப்படும். மேலும், விவரங்கள் தேவைப்படுவோர் இந்த இணையதள முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிறந்த போட்டியாளர்கள் தேர்வு குழு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். புல்லட் ரயில் திட்டத்துக்கான லோகோ 2017ம் ஆண்டு இதேபோன்று நடத்தப்பட்ட போட்டியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு  இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: