×

குமரி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ : வனத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

பூதப்பாண்டி:  குமரி மாவட்ட மலை பகுதியில் காட்டுத்தீ பரவியதால் ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகின.குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கீரிப்பாறை, காளிகேசம், புதுகுளம் உட்பட பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டங்களும், தனியார் கிராம்பு, நல்ல மிளகு தோட்டங்களும் உள்ளன. நேற்று முன்தினம் மாலை கீரிப்பாறையில் திடீரென காட்டு தீ பரவியது. தீயில் ரப்பர் தோட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் கருகின. மேலும் விலை உயர்ந்த தேக்கு போன்ற மரங்களும் நாசமாயின.இதுகுறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தும் ரப்பர் தோட்டங்களில் பரவியுள்ள காட்டுத்தீயை அணைக்க யாரும் முன்வரவில்லை. இதற்கு தீ விபத்து நடக்கும் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல வசதி இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இதனால் மலை கிராம மக்கள்  அச்சமடைந்தனர். இந்நிலையில் தீ விபத்து நடந்த பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று காலை தீ தானாகவே அணைந்தது. கீரிப்பாறை ரப்பர் தோட்டங்களில் காட்டுத்தீ பரவியதால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை ெதரிவித்தனர்.

கொடைக்கானலில் காட்டுத்தீ: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அருகேயுள்ளது பேத்துப்பாறை. இங்குள்ள வருவாய்த்துறை, தனியார் நில பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் காட்டுத்தீ பரவி, கொடைக்கானல் நகர் பகுதியான நாயுடுபுரம், சின்னப்பள்ளம், பாத்திமா மலை, குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் எரிந்து வருகிறது. கொடைக்கானல் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forests ,hills ,Kumari , Wildfire, forest, public accusation
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...