ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம்

குயிடோ: ஈக்வடாரின் கிழக்கில் அமேசான் பகுதியில் 17 கிமீ தொலைவில், பெரு எல்லையில் அமைந்துள்ள மொன்டால்வோ நகரை மையம் கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுவாக தென் அமெரிக்க நாடுகளில் 70 கிமீ அல்லது அதற்கு குறைவான ஆழத்தில்தான் நில நடுக்கம் ஏற்படும். ஆனால், நேற்றைய நிலநடுக்கம் 132 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. . இதே பகுதியை மையமாக கொண்டு 6 ரிக்டர் அளவுகோலில்  ஒரு நிலநடுக்கமும் 7.5 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டதாக ஈக்வடார் புவியியல் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இ்ந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: