×

தெலங்கானாவில் 1 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி: சந்திரசேகர ராவ் தகவல்

ஐதராபாத்: தெலங்கானாவில் 1 லட்சம் வரையிலான பயிர்கடனை தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. முன்னதாக தேர்தல் வாக்குறுதியாக 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அந்த கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், முதல்வரும் நிதித்துறை அமைச்சருமான சந்திரசேகர ராவ் நேற்று சட்டப்பேரவையில் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தேர்தல் வாக்குறுதியாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்திருந்த பெரும்பாலான நலத்திட்டங்களை நிறைவேற்றும் அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது:
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி வரை விவசாயிகள் நிலுவை வைத்துள்ள 1 லட்சம் வரையிலான பயிர்கடன்கள் தள்ளுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்யப்படுகிறது. ரிது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது, இனி ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 10,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. முதியோர்கள், விதவைகள், தனியாக வசிக்கும் பெண்கள், பீடித்தொழிலாளர்கள் யானைக்கால் நோய் தாக்கியவர்களுக்கு வழங்கப்படும் ஆசாரா ஓய்வூதியம் ரூ.1000 என்பதில் இருந்து ரூ.2016 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 1500 ஐ 3016 ஆக உயர்த்தி வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrasekara Rao ,Telangana , Telangan,Chandrasekara Rao
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...