ஆபரேஷன் தாமரை ஆடியோ விவகாரம் எடியூரப்பாவிடம் விசாரிக்க தடை: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

பெங்களூரு: ஆபரேஷன் தாமரை மூலம் மஜத எம்.எல்.ஏ.வை பாஜவிற்கு இழுக்கும்  முயற்சியாக எடியூரப்பா பேசிய ஆடியோ விவகாரத்தில் விசாரணை நடத்த கலபுர்கி  உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் காங்கிரஸ் மற்றும் மஜத  எம்.எல்.ஏ.க்களை பாஜவுக்கு இழுக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டு  இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 7ம் தேதி இரவு  சித்ரதுர்காவில் மஜத எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகனுடன் எடியூரப்பா பேரம்  பேசியதாவும், அப்போது பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியதாகவும் குற்றம்  சாட்டப்பட்டது. இது தொடர்பான ஆடியோவை முதல்வர் குமாரசாமி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த  விவகாரம் கர்நாடக சட்டப்பேரவையில்  விவாதிக்கப்பட்டு எஸ்.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. தங்களை கைது  செய்யவும், தங்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரியும்  எடியூரப்பா உள்பட 4 பேர் கலபுர்கி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்  செய்திருந்தனர். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம்   எடியூரப்பா  உள்ளிட்ட 4 பேரிடம்  விசாரனை நடத்த போலீசாருக்கு இடைக்கால தடைவிதிப்பதாக கூறி வழக்கை மறு தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: