2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சு : 38 தொகுதிகளில் போட்டி...டிடிவி.தினகரன் பேட்டி

சேலம்: சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான், இன்னொரு கட்சியின் பின்னால் அலைகின்றனர். அதிமுக கட்சி இப்போது எப்படி இருக்கிறது? இரட்டை இலை சின்னம் இருந்தும் ஜெயலலிதா தொகுதியிலேயே வெற்றி பெற முடியாது என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர். அமமுகவை கண்டு பயந்து தான், அவர்கள் எல்ேலாரோடும் கூட்டணி சேருகின்றனர். நாங்கள் தனியாக தான் நிற்கிறோம். அமித்ஷா, அவர்களது கட்சி பூத் கமிட்டி கூட்டத்திற்காக வந்து செல்கிறார். தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில், 38 தொகுதிகளில் கூட்டணியுடன் சேர்ந்து நிற்போம் என நினைக்கிறேன். அவற்றில் மாபெரும் வெற்றியும் பெறுவோம். அதிமுக அமைச்சர்கள் கூறுவது போல, தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்.

எல்லா தொகுதிக்கும் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம். வரும் 28ம் தேதிக்கு மேல் அறிவிக்க, 2 கட்சிகளுடன் பேசி வருகிறோம். அநேகமாக நாங்கள் 38 ெதாகுதிகளில் நிற்போம் என நினைக்கிறேன். தேமுதிக தலைவர், தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என தெரிவித்தார். எனவே, அவருடன் கூட்டணி வைக்க முடியாது. ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது, அவருக்கு நினைவு மண்டபம் கட்ட கூடாது என்ற கட்சிகளுடன் சேர்ந்தால் தொண்டர்களும், மக்களும் எப்படி பார்ப்பார்கள்? எங்களை பொறுத்தவரை, பாமகவுக்கு எந்த நிலைப்பாடோ அதே தான், தேமுதிகவிற்கும். ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்பட்டவர்களுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது.  இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: