×

ரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நேற்றுஅளித்த பேட்டி: நான் திரைப்பட வசனம் போல பேசுவதாக தமிழிசை கூறியிருப்பது அவருடைய கருத்து. எங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறேன். ஆனால் ஆதரவு என்பது கேட்டுப் பெறுவது அல்ல. ஒருவர் நேர்மையாக செயல்படுகிறார் என்று கருதினால் அவர்களாகவே அளிப்பதுதான் ஆதரவு. பிரதமர், தமிழகத்துக்கு வந்தே ஆக வேண்டும். ஏனெ்றால் இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழகம். அவர் வரவில்லை என்றால் தான் கேள்வி கேட்க வேண்டும். வருவதற்கு ஏன் வருகிறார் என்று கேள்வி கேட்க கூடாது. அதே நேரத்தில், தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது, வராத பிரதமர் பற்றி, ஏன் வரவில்லை என்பதை கேட்டே ஆக வேண்டும். அதை கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. வந்ததற்கு ஒரு சிறு நன்றி என்று சொல்லலாம். ஆனால் அப்போது ஏன் வரவில்லை என்பதை அனைவரும் கேட்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajini , People's Justice, Leader Kamal Haasan, Rajini support
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...