வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிறார் மையம் தொடக்கம்: கமிஷனர் திறந்து வைத்தார்

வேளச்சேரி: வேளச்சேரி காவல் நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் வெல்-பீயிங் சென்டர் என்ற பெயரில் இறகுபந்து விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிறார் மையம் தொடக்கம் மற்றும் வேளச்சேரி காவல் நிலையம், பரங்கிமலை, மீனம்பாக்கம், நீலாங்கரை ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 1500 சிசிடிவி கேமராக்கள் தொடக்க விழா நேற்று வேளச்சேரியில் நடந்தது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கலந்து கொண்டு, சிறார் மையம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்து பேசியதாவது:

 சென்னை முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறைந்தது 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்த திட்டமிட்டோம், ஆனால் அதைவிட சிறப்பாக குறைந்த தூரத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  இதனால்  குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்கள் நடந்தாலும் குற்றவாளிகளை அடையாளம் காணவும், உண்மையான குற்றவாளியை பிடிப்பதற்கும் சிசிடிவி கேமரா பெரும் உதவியாக உள்ளது. மேலும் நீதிமன்றத்திலும் ஆதாரமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்க முன்வர வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: