காரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் ஜிஆர்டி புதிய ஷோரூம்

சென்னை: சென்னை காரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் 48வது புதிய ஷோரூம் திறக்கப்பட்டது. இங்கு, திறப்பு விழா சலுகையாக தங்கத்தின் விலையில் கிராமிற்கு 50 குறைவாகவும், வைரத்தின் விலையில் கேரட்டிற்கு 5000 குறைவாகவும், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலியில் 25 சதவீதம் குறைவாகவும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஜிஆர்டி மேலாண்மை இயக்குனர் அனந்த பத்மனாபன் கூறுகையில், ‘வாடிக்கையாளர்களின் ரசனையை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் நவீன மற்றும் பாரம்பரிய நகைகளை வழங்குகிறோம். அதே சமயத்தில் நியாயமான விலையில் வழங்கவேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். மேலும் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கிறது,’ என்றார்.

ஜிஆர்டி மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘வாடிக்கையாளர்களோடு நல்ல உறவில் நீண்ட காலம் இணைந்து பயணித்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து விதமான நகைகளும் எங்களிடம் உள்ளது. மேலும் இந்த புதிய ஷோரூமில் உள்ள நகைகள் கலெக்‌ஷன் வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம்,’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: