திருநின்றவூர், பல்லாவரத்தில் காவல்நிலைய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகம் முழுவதும் 332.45 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலைகள், பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நேற்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் பம்மதுகுளம் உபரிநீர் கால்வாயின் குறுக்கே 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் 24 காவலர்  குடியிருப்புகள், அரியலூர், சென்னை திருநின்றவூர், பல்லாவரம், மதுரை,  விழுப்புரம் மாவட்டங்களில் 5 காவல் நிலையக் கட்டிடங்கள், மதுரை சரக குற்றப்  பிரிவு குற்றப்புலனாய்வு துறை அலுவலக கட்டிடம், ஆம்பூரில் தீயணைப்பு  மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் என மொத்தம் 16 கோடியே 6 லட்சத்து 83  ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை தலைமைசெயலகத்தில் வீடியோ  கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: