ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஐநா. கண்டன அறிக்கைக்கு முட்டுக்கட்டை போட்ட சீனா

ஐநா: புல்வாமா தாக்குதல் நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தனது கண்டன அறிக்கையை வௌியிட்டதற்கான காரணம் அம்பலமாகி இருக்கிறது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாயினர். இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. ஆனால், உலகின் மிகப்பெரிய அமைப்பாக கருதப்படும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மட்டும் தனது கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிடாமல் இருந்தது. ஒரு வார தாமதத்துக்கு பிறகு நேற்று முன்தினம் இரவுதான் இந்த கண்டன அறிக்கை வெளியானது. அதில், ‘ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்டது கோழைத்தனமான தாக்குதல். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் நடந்த மாலையே இந்த கண்டன அறிக்கையை வெளியிட பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த கண்டன அறிக்கையில்  ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெயருடன் ‘தீவிரவாதம்’ என்ற பெயரை சேர்க்க வும்,  இந்த அமைப்பின் தலைவன் மசூத் அசார் பெயரை சேர்க்கவும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே, இந்த அறிக்கை ஒரு வாரம் தாமதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தானும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளது. இந்த இரண்டு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, கண்டன அறிக்கையை பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டது வரலாற்று சாதனையாகவே கருதப்படுகிறது. ஏனெனில், பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள சீனா, இந்த அறிக்கையை தடுக்க நினைத்து இருந்தால் தடுத்து இருக்க முடியும். ஆனால், உலக நாடுகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிலும் என்பதால், அந்த முடிவை கைவிட்டு அறிக்கையை ஆதரித்துள்ளது.

ஐ.நா அறிக்கை தீர்ப்பல்ல

ஐநா கண்டன அறிக்கை பற்றி  சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கெங் சாங் கூறுகையில், ‘‘ஒரு அமைப்பை குறிப்பிட்டு ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை பொதுவான உடன்பாடுதான். அது தாக்குதல் மீதான தீர்ப்பு அல்ல’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: