விளையாட்டு துளிகள்

* உலக கோப்பை போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் மோதுவதைத் தவிர்ப்பதால் இந்திய அணி 2 புள்ளிகளை இழக்க நேரிடுவதை நான் வெறுக்கிறேன். அது பாகிஸ்தான் அணிக்கே சாதகமாக இருக்கும். எனவே இந்த போட்டியை கைவிடுவதை விட, எதிர்த்து விளையாடி அவர்களை வீழ்த்துவதே சரி என்ற கவாஸ்கரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்’ என்று மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

* டெல்லியில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இனி சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. மேலும், பாக். வீரர்கள் பங்கேற்க இருந்த ஆண்கள் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவுக்கான ஒலிம்பிக் தகுதி அந்தஸ்தையும் திரும்பப் பெற்றுள்ளது.

* சையது முஷ்டாக் அலி டி20 தொடரில், ஜம்மு காஷ்மீர் அணியுடன் நேற்று மோதிய ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜம்மு அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது (வாத்வான் 47, கஜுரியா 31, மன்சூர் தார் 39, கேப்டன் ரசூல் 24). ராகுல் சுக்லா 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய ஜார்க்கண்ட் 16.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து எளிதாக வென்றது. ஆனந்த் சிங் 48 ரன்னில் (34 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் இஷான் கிஷண் 100 ரன் (55 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), விராத் சிங் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: