திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் காதர் மொய்தீன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி தொகுதியும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளிக்கையில்: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

மு.க.ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு :

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு இன்று நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். நேற்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் அவரிடம் அரசியல் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது அரசியல் எதுவும் பேசவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் விரைவாக உடல்நிலை தேறிவந்து நாட்டுக்கும் மக்களுக்கும் விஜயகாந்த் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: