×

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்தது ஒலிம்பிக் கமிட்டி

டெல்லி :  டெல்லியில் நடந்துவரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டிக்கு இரு பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்ததை தொடர்ந்து , இந்தியாவில் எதிர்காலத்தில் எந்தவிதமான சர்வதேசப் போட்டிகள் நடத்த தடை விதித்தும், போட்டிகள் நடத்துவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளை ரத்து செய்வதாகவும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு (ஐஓசி) உத்தரவிட்டுள்ளது.

மேலும் டெல்லியில் நடந்து வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் 25 எம் ரேபிட் துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் அந்தஸ்தையும் இந்தியாவுக்கு ஐஓசி அதிரடியாக ரத்து செய்துள்ளது. புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் நடந்து வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியல் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த ஜிஎம். பஷிர், மற்றும் கலில் அகமெட் ஆகிய இரு வீரர்கள் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

alignment=


இவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஐஓசியிடம் அளித்த புகாரை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் எந்தவிதமான தடையும் வீரர்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக இந்தியா உறுதியளிக்காதவரை, இந்தியாவில் ஒலிம்பிக் தொடர்பான எந்தவிதமான போட்டிகளும் நடத்த அனுமதிக்க முடியாது என்று ஐஓசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

alignment=


சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு அமைப்பின்(ஐஎஸ்எஸ்எப்) தலைவர் விளாதிமிர் லிசின் விடுத்த அறிவிப்பில், 2020-ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கான 16 வகை ஒலிம்பிக் அந்தஸ்துகளும் ரத்து செய்யப்படுவதாகவும் , 2 பிரிவுகளுக்கும் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு அமைப்பின் முடிவையடுத்து சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு(ஐஓசி) வெளியிட்ட அறிவிப்பில் : பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு விசா மறுக்கப்பட்டதையடுத்து, டெல்லியில் நடக்கும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியில் 25 எம் ரேபிட் பிஸ்டர் பிரிவுக்கான ஒலிம்பிக் தகுதி பெறும் அந்தஸ்து பறிக்கப்படுகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள 61 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர்,வீராங்கனைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

alignment=


ஐஓசி, இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் அமைப்பு ஆகியவை கடைசி நேரம் வரை இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தினோம். ஆனால்  பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதற்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் இந்திய அரசு அளிக்கவில்லை. அவர்களுக்கு அனுமதியும் அளிக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை என்பது ஒலிம்பிக்கின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமானது, வீரர்களை வேறுபாட்டுடன் நடத்தக்கூடாது என்ற கொள்கைக்கு விரோதமானது.

விளையாட்டில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்று பல முறை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இதையடுத்து, இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடன் எதிர்காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, ஒலிம்பிக் தொடர்பாக பேச்சு நடத்துவது என அனைத்து ஆலோசனைகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். எதிர்காலத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தடையின்றி போட்டியில் பங்கேற்க அனுமதிப்போம் என்று எழுத்துப்பூர்வமாக அனுமதியளிக்காதவரை ஆலோசனை நடத்தமாட்டோம்.  இந்த உறுதிமொழி அளிக்காதவரை எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் ஏதும் இந்தியாவில் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று சர்வதேச கூட்டமைப்புக்கும்(ஐஎப்) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Olympic Committee ,sports tournaments ,India , IOC,Tokyo Games,shooting competition,India,Pakistan,Kashmir
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...