தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்பு துறை முக்கிய பங்கு வகிக்கிறது - பிரதமர் மோடி

சியோல்: தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்புத்துறை முக்கிய இடம் பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்கொரிய தொழில்நுட்பத்தில் உருவான கே-9 வஜ்ரா பீரங்கி இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு சான்று என்று மோடி தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியா - தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தென்கொரிய அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அந்நாட்டுக்கு நேற்று சென்றார். தலைநகர் சியோல் விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த இந்திய-தென் கொரிய தொழில் கருத்தரங்கில் மோடி பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் மிகவும் வலுவானது. உலகில் வேறெந்த மிகப்பெரிய பொருளாதார நாடுகளும், அடுத்தடுத்த ஆண்டுகளில் 7 சதவீத வளர்ச்சியை எட்டவில்லை.

மிக விரைவிலேயே இந்திய பொருளாதாரம் 355.5 லட்சம் கோடியை தொட்டுவிடும். அங்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தொழில் செய்யும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தியது மற்றும் பல்வேறு துறைகளில் அரசு மேற்கொண்ட கடினமான கொள்கை முடிவுகளால் இன்று, உலக வங்கியின் எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 65 இடங்கள் முன்னேறி 77வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் நாங்கள் டாப்-50க்கும் இடம்பிடித்து விடுவோம்.

காந்தி சிலை திறப்பு

சியோலின் யான்செய் பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்,  முன்னாள் ஐநா பொதுச் செயாலளர் பான் கி மூன் ஆகியோர் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: