ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை நீதியின் முன் நிறுத்த வேண்டும்; ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா: புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் 2,500பேர், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 வாகனங்களில் கடந்த 14ம் தேதி சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் போலீசாரின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டு நிரப்பிய காரை போலீஸ் பஸ் மீது தீவிரவாதிகள் மோதவிட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் 44 வீரர்கள் பலியாயினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. புல்வாமா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் மறுப்பு

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்படி பொறுப்பாகும் என இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியிருப்பது தவறு எனவும் கூறியுள்ளார். தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன் என்றும் இம்ரான்கான் கேள்வி எழுப்பினார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டு என இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: