நெடுஞ்சாலையில் லிப்ட் கேட்டு டிரைவர்களை கொன்று கொள்ளை : சகோதரன், சகோதரி சிக்கினர்

புதுடெல்லி: நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி, பின் டிரைவரை கொலை செய்து, அவர்களது உடைமைகளை கொள்ளை அடிக்கும் பலே சகோதரன், சகோதரி போலீசில் வசமாக சிக்கினர்.அரசு போக்குவரத்து டிரைவரின் சடலம் சோனிப்பட் சாலையோரத்தில் இருந்து சில நாட்களுக்கு முன் மீட்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிந்தது. அதே முறையில் ஆட்டோரிக்‌ஷா டிரைவர் ஒருவரும் அரசு டிரைவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு இறந்திருப்பதை போலீஸ் உறுதி செய்தது. புறநகர் டெல்லியின் அலிப்புர் அடுத்த பக்தாவர்புர் கிராமத்தில் கொலையான டிரைவரின் ஆட்டோ இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

அதையடுத்து காவல்துறை சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜய் குமார் தலைமையில் போலீஸ் குழு, பக்தாவர்புர் கிராமத்து மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. 100க்கும் அதிகமானவர்களை விசாரித்ததில், வேலை வெட்டி இல்லாத ஷிவகுமார் மற்றும் நீலம் எனும் அண்ணன், தங்கை இருவரும் அடிக்கடி இரவில் தாமதமாக வீடு திரும்புவது பற்றிய விவரம் தெரிய வந்தது. அதையடுத்து அந்த 2 பேர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.இருவரும் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் காத்திருந்து, லிப்ட் கேட்பதும், லிப்ட் கிடைத்து வாகனம் செல்லும்போது, டிரைவரை கழுத்து நெரித்து கொன்று, வாகனம், பணம் உள்பட வாகனத்தில் தேறும் உடைமைகளை கொள்ளை அடித்து வந்ததையும் ஒப்புக் கொண்டனர்.

தனியாக இரவு நேரத்தில் லிப்ட் கேட்டால், நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்த மாட்டார்கள் என்பதால், கவர்ச்சியாக இருந்தால் வாகனம் உடனே நிற்கும் எனக் கருதி, தங்கையை திட்டத்துக்கு பயன்படுத்தி கொலை, கொள்ளையில் ஈடுபட்டேன் என ஷிவ குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். டிரைவருக்கு ஆசை காட்டும் வகையில் காரில் முன் பக்க இருக்கையில் நீலம் அமர்ந்து கொள்வார் என்றும், டிரைவருடன் ஆசை வார்த்தை பேசிக்கொண்டு வரும் நீலம், தனியான இடத்தில் காரை நிறுத்த வைப்பார், அப்போது பின்பக்க இருக்கையில் இருந்து சகோதரியின் துப்பட்டாவை பயன்படுத்தி கழுத்தை நெரித்து ஆட்டோரிக்‌ஷா டிரைவரை கொலை செய்தேன் என அவர் தங்களது கொலை, கொள்ளையை விவரித்து உள்ளார்.

அதுபோல, காரை ஓட்டிக்கொண்டு வந்த அரசு பஸ் டிரைவரான பிரித்தம் சவுகான், 2 பேரையும் ஸ்வரூப் நகரில் இறக்கி விடுவதாக லிப்ட் கொடுத்தார். மதுபன் சவுக் அருகே அவரை மின்சார ஒயரால் கழுத்தி நெறித்து காரை ஒட்டிச் சென்றோம். டயர் பஞ்ச்சர் ஆனதால், அங்கேயா சாலையோரமாக சடலத்தை வீசிவிட்டு பின்னர் டயர் மாற்றிக்கொண்டு கிராமத்துக்கு அந்து சேர்ந்தோம் என அண்ணன், தங்கை ஆகிய இருவரும் தெரிவித்து உள்ளனர்.பிரித்தமின் காரும் கொலையாளிகளின் வீடருகே நிறுத்தி வைக்கப்பட்டு  இருந்ததை கண்டுபிடித்த போலீஸார், கார் மற்றும் ஆட்டோரிக்‌ஷாக்களை பறிமுதல் செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: