முதலமைச்சர் கோப்பை நீச்சல், ஜிம்னாஸ்டிக் போட்டி

சென்னை: மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை நீச்சல், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் பிப்.23,24 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளன. இது குறித்து  வேளச்சேரி விளையாட்டரங்க அலுவலர் பா.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு 2018-19 ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை  நீச்சல், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடைபெற உள்ளன. மாநில அளவிலான இந்தப் போட்டிகள் பிப்்்்.23, 24 தேதிகளில் சென்னை வேளச்சேரி நீச்சல்குள விளையாட்டரங்கில் நடக்கும்.  போட்டிகளில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் சுமார் 320 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியில் முதல் 3 இடங்கள் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ஒரு லட்சம், 75 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இப்படி இந்த 2 போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 58.50 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: