உலக தாய்மொழி தினம் : ஐ.நா. வெளியிட்டுள்ள 3 ஸ்டாம்ப் ஷீட்டுகளில் ஒன்றில் தமிழில் வணக்கம் என்ற சொல்

நியூயார்க் : உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஐ.நா. வெளியிட்டுள்ள 3 ஸ்டாம்ப் ஷீட்டுகளில் ஒன்றில் தமிழில் வணக்கம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு உலக மொழிகளை காக்கவும் அவற்றின் சிறப்பை உணர்த்தவும்  தாய்மொழி தினத்தை உருவாக்கியது. கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்த தினம் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி தொடர்ந்த மொழிகள் குறித்த ஆய்வை நடத்தி வரும் யுனெஸ்கோ உலகில் பேசப்படும் 6000 மொழிகளில் 43% மொழிகள் அழியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் உலக மக்களில் 40% பேர் தங்களின் தாய்மொழியில் கல்வி கற்கவில்லை என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, ஒரு மொழி மற்றும் அதன் கலாச்சாரம் ஆகியவை அழிந்து வருவதாக யுனெஸ்கோவின் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உலக  தாய்மொழிகள் தினத்தை முன்னிட்டு ஐநா  3 சிறிய ஸ்டாம்ப் ஷீட்டுகளை இன்று வெளியிட்டுள்ளது. இந்த சிறிய ஸ்டாம்ப் ஷீட்டுகளில் சர்வ்தேச அளவில் 41 மொழிகளில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழியில் வணக்கம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. 41 மொழிகளில் இந்தியாவில் இருந்து மட்டும் 6 மொழிகள் அதாவது பெங்காலி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, இந்தி, உருது ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: