சிறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம்: பிப்.,24-ல் தொடங்கி வைக்கிறார் மோடி

டெல்லி: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி கோரக்பூரில் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக, நாடு முழுவதும் உள்ள 12 கோடி சிறு விவசாயிகள் இந்த உதவித் தொகையை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக விவசாயிகளின் பட்டியலை அனுப்புவதில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். அன்று ஒரே நாளில் ஒரு கோடி விவசாயிகளின் கணக்கில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும், அனைத்து சிறு விவசாயிகளுக்கும் மார்ச் 31ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் முதல் தவணை செலுத்தப்பட்டு விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: