சேலம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம்

* கிலோ ₹20க்கு விற்பனை

சேலம் : சேலம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளரிக்காய் அமோக விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தையொட்டி தமிழகம் முழுவதும் வெள்ளரிக்காய் சாகுபடி நடப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு சாகுபடிக்கான வெள்ளரி விதைகளை விவசாயிகள், கடந்த டிசம்பர் மாதம் விவசாயிகள் ஊன்றினர். அந்த வகையில், சேலம் கன்னங்குறிச்சி, வீராணம், டி. பெருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊன்றப்பட்ட விதைகள் அமோக விளைச்சலை தந்துள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் பரவலாக வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்படுகின்றன. சாகுபடி செய்துள்ள பகுதிகளில் வெள்ளரிக்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. அறுவடை செய்யப்படும் வெள்ளரிக்காயை அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். ஒரு கிலோ ₹20 முதல் ₹30 என விற்பனை செய்கிறோம்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: