நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்கள் கருத்து கூறலாம் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்க்க பொதுமக்கள் கருத்து சொல்லலாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக முன்னேற்றத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு என்று ஸ்டாலின் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொதுமக்கள் புதுமையான எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை dmkmanifesto2019@dmk.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம் என்று அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் #DMKmanifesto2019 என்ற ஹெஷ்டேக்கிலும் மக்கள் தங்களது எண்ணங்களை பிப்., 28ம் தேதிக்குள் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநரை சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார். 5 மாதங்களுக்கு மேலாகியும் அமைச் ரவை தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, 7 பேரின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழரைக்கோடி தமிழர்களுக்கு ஏமமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார. மேலும் 7 பேரின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் முதலமைச்சர் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மேகதாது அணை கட்டுவதை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: