×

வங்கதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

டாக்கா : வங்கதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயன குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ரசாயன குடோனில் பற்றிய தீ, குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியது. இதில் 69 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 45 பேரை டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பின் உள்ளே சிக்கிக் கொண்ட12 பேர் வெளியேற முடியாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த கேஸ், ரசாயன பொருட்கள் மீது பட்டதே தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 10 சைக்கிள் ரிக்ஷாக்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். தீ பரவியதும் அப்பதியில் கூட்டம் கூடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், உள்ளே சிக்கியவர்கள் வெளியேற வழியில்லாமல் போனதாலேயே அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடத்திற்குள் சிக்கி உள்ளவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,apartment ,Bangladesh , 69 Dead,Apartments,Fire,Chemical Warehouses , Bangladesh
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா