×

கச்சத்தீவு அருகே 13 தமிழக மீனவர்கள் கைது : இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்தி கடுமையாக தாக்கி விரட்டி அடிப்பதும் நடந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க இரு படகுகளில் சென்ற மீனவர்கள் 9 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 9 போரையும் அவர்களது படகுகளுடன் கைது செய்தது.

இந்நிலையில் கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடலோர காவல் படை, அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம் நாகை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 25 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.  மேலும் இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,Tamil Nadu ,Katchatheevu ,atrocities ,Sri Lankan , 13 Tamil Nadu fishermen ,arrested , Katchatheevu: Sri Lankan naval atrocities
× RELATED இலங்கை சிறையிலிருந்து...