×

சென்னை பல்கலை அறிவித்த தேர்வு கட்டண உயர்வு ரத்து: மாணவர்களின் 3 நாள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்த தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறுவதாக சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி காத்திருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களிடம் கூறினார்.சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணத்தை உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக துறைத்தலைவர்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிக்கை அளித்தது. இந்நிலையில், இதை கண்டித்து மாணவர்கள் கடந்த 3 நாட்களாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறுவதாக, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தில் போதுமான நிதி இல்லை என்பதால் ஒரு பாடத்துக்கான தேர்வு கட்டணத்தை 100ல் இருந்து 150 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணத்தை கேட்டபோது, பல்கலைக்கழகத்தில் போதுமான நிதி இல்லை என்றும், பிற பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகத்தை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் போதுமான நிதி இல்லாததால் தேர்வு கட்டணத்தை உயர்த்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இதன்மூலம் கிடைக்கும் 10 கோடி பணம் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க பயன்படும் என்றும் கூறுகின்றனர். பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி எங்கே போனது. முறைகேடுகள் ஏராளமாக நடந்துள்ளது, யார் யாரை அதனால் லாபம் அடைந்துள்ளனர். அவர்களை விட்டு விட்டு, நிதி இல்லை என்று சொல்லி எங்களின் தேர்வு கட்டணத்தை ஏன் உயர்த்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை.

வேண்டுமென்றால் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். பி.எச்டி மாணவர்களை தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கிறார்கள். அவர்களுக்கு அந்த பணிக்காக சம்பளம் ஏதும் வழங்கப்படவில்லை. இதே போல் உள்மதிப்பீட்டு தேர்வுக்கு மாணவர்களே விடைத்தாள்களை எடுத்து வர வேண்டும் என்று சொல்கின்றனர். அதேேபால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, எங்களை போலீசை அனுப்பி மிரட்டினர். போராட்டத்தில் பங்கேற்ற பல மாணவர்கள் துறைத்தலைவர்களின் மிரட்டலால், போராட்டத்தில் இருந்து பின்வாங்கினர். தேர்வு கட்டணம் மட்டுமே ₹50 அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மறு தேர்வு, மறுமதிப்பீடு, விடைத்தாள் நகலுக்கான கட்டணம் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தேர்வு கட்டணம் பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகம் தொடர்பாக பதிவாளர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, கடந்த 3 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். இந்நிலையில் தேர்வு கட்டண உயர்வுவை திரும்ப பெறுவதாக சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக துறைத்தலைவர்களுக்கு சுற்றறிக்கை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.  இவ்வாறு காத்திருப்பு போராட்டம் நடத்திய மாணவர்கள் தெரிவித்த

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cancellation ,tariff hike ,Chennai ,University ,wait waiter , Madras University, Waiting Struggle, withdrawal
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...