ஐகோர்ட் முன்னாள் துணை பதிவாளருக்கு 1 லட்சம் உதவித்தொகை: சட்டப்பணிகள் ஆணையம் வழங்கியது

சென்னை: முதுமையால் உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டு வாடும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் துணை பதிவாளருக்கு, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு 1 லட்சம் வழங்கியது.

சென்னை, போரூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டது.

மேலும் இவரது மகனும் தீராத நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தனக்கு பார்கவுன்சிலில் இருந்து உதவித்தொகை பெற்று தரும்படி சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவில் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த செயலாளர், நீதிபதி ஜெயந்தி தமிழ்நாடு பார்கவுன்சிலிடம் தெரிவித்தார். இதை பரிசீலனை செய்த பார்கவுன்சில் பாதிக்கப்பட்ட சீனிவாசனுக்கு 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது. இதை நீதிபதி ஜெயந்தி, போரூரில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞருக்கு வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: