புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்

லக்னோ: காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 12 பேர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் தாக்குதலில் இறந்த ஷாம்லியை சேர்ந்த வீரர் அமித்குமார் கோரியின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர்கள் பிரியங்கா காந்தி, ஜோதிராதித்யா சிந்தியா  ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது பேசிய ராகுல்காந்தி, “நாம் சோகத்தில் தான் இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் உங்கள் மகனின் தியாகத்தால் இந்த நாடே பெருமை கொள்கிறது. நானும் தீவிரவாதத்தால் என் தந்தையை இழந்துள்ளேன். இந்தியா வீரம் மிக்க நாடு. எந்த சக்தியாலும் அதனை பின்னுக்கு தள்ளிவிட முடியாது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: