சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய  பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் 18 லட்சத்து 19 ஆயிரம் மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தொழிற்பாடப் பிரிவில் படிப்போருக்கான தேர்வு இன்று தொடங்குகிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது.தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் தாங்கள் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை, தேர்வுக்கான ஹால்டிக்கெட்  ஆகிய இரண்டையும் கட்டாயம் தேர்வு மையத்துக்கு எடுத்து வர வேண்டும். ஹால்டிக்கெட்டில் பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன், பெற்றோரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த ஆண்டு புதிய முறையை சிபிஎஸ்இ அமல்படுத்தியுள்ளது. 

அதனால் பெற்றோர் கையொப்பம் இல்லாத ஹால்டிக்கெட் கொண்டு வரும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களின் வாயில்கள் சரியாக 10 மணிக்கு மூடப்படும். அதனால் காலை 9.45 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும்.  10.10 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். கேள்வித்தாள் படித்து பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் விவரங்கள் குறிக்கவும் 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. 10.30 மணிக்கு விடை எழுதத் தொடங்க வேண்டும். காலை 10 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: