படிம எரிபொருளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்: நிபுணர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

புதுடெல்லி: ‘‘நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருட்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயன்படுத்த நிபுணர்கள் முன்வர வேண்டும்’’ என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று, ‘சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த வாய்ப்புகளும், சவால்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இன்னும் எரிபொருளாக நிலக்கரிதான் பயன்படுத்தப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிபொருள்கள் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையிலும் நிலக்கரியை நாம் தொடர்ந்து எரிபொருளாக பயன்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில் குறைந்த விலையில் அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. கார்பன் புகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இயற்கை வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும். இதற்காக சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் அது தொடர்பானவர்கள் புதை படிமங்களை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வண்ணம் பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக செயல்படுத்தக்கூடிய யோசனையை தெரிவிக்க வேண்டும். கருத்தரங்கமே சர்வதேச நிபுணர்களுக்கு சிறந்த ஆய்வு தளமாக விளங்கி வருகிறது. இதன் உதவியால் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசனை, ஆய்வு, மேம்பாடுகளை தெரியப்படுத்த முடியும். இந்த 3 நாள் கருத்தரங்கத்திற்கு பின் இந்த பூமியை தொழிற்சாலை வசதி மிக்கதாக மாற்றுவதுடன் எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்க நிபுணர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: