ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் சமர்ப்பிக்க நாளை வரை கெடு

புதுடெல்லி: வியாபாரிகள் ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்ய நாளை வரை கெடுவை ஜிஎஸ்டி கவுன்சில் நீட்டித்துள்ளது.மாநில அரசு நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற லாட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக மகாராஷ்டிரா நிதியமைச்சர் சுதிர் முங்கண்டிவார் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, லாட்டரிகளுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளித்தது.

 இதுதொடர்பாக முடிவு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று கூடியது. ஆனால், இந்த விஷயத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் வரும் 24ம் தேதி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி விதிகளின்படி, வியாபாரிகள் ஜனவரி மாதத்துக்கான விற்பனை விவரங்களை ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில் இந்த மாதம் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த கெடுவை நாளை வரை நீட்டிப்பு செய்து ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று அனுமதி அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் 28ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: