×

சில அரசியல் கட்சிகள் வெறுப்பை பரப்புகின்றன: மம்தா கருத்து

கொல்கத்தா: ஒரு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வெறுப்பையும், வதந்தியையும் பரப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தினார்கள். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மேகாலயா கவர்னர் தத்தகட்டா ராய்  சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். இதில் ‘காஷ்மீரை புறக்கணியுங்கள். அமர்நாத் யாத்திரை செல்வது, மாநிலத்தில் பொருட்களை வாங்குவது என அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்’ என்று பதிவிட்டு இருந்தார். கவர்னரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அரசியல் கட்சிகளின் ஒரு பிரிவினர், அமைப்புகள். அரசு பதவிகளில் இருப்பவர்கள் வதந்தியையும், வெறுப்பையும் தனது அபாயகரமான அறிக்கைகள் மூலமாக பரப்புகின்றனர் பத்திரிக்கையாளர்கள் கூட இதற்கு தப்பவில்லை. இது மிகவும் அவமானகாரமான அரசியல். இது தான் தற்போதுள்ள மாசுபட்ட கீழ்தரமான அரசிய லாகும்’ என பதிவிட்டுள்ளார். கடந்த திங்களன்று மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு போருக்கு செல்லுமா என முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பதிலளித்த முதல்வர் மம்தா, “ பதன்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு பின் கூட அரசு எதுவும் செய்யவில்லை. பொது தேர்தலை முன்னிட்டு ஹிஸ்டிரியா போன்ற போரை வேண்டுமானால் அரசு உருவாக்கும்” என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parties ,Mamta , Political parties, Mamata, West Bengal Chief Minister Mamata Banerjee
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...