சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு: அமலாக்கத் துறையில் ராபர்ட் வதேரா ஆஜர்

புதுடெல்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு  ராபர்ட் வதேரா ஆஜரானார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. பிரியங்கா காந்தியின் கணவர். இவர் லண்டனில் சொத்து வாங்கியதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. விசாரணைக்கு ஆஜராகாமல் வதேரா தவிர்த்து வந்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ெதாடர்ந்து அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். ஏற்கனவே அவர் மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 23 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு மத்திய டெல்லியின் ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வதேரா ஆஜரானார். அவருடைய வாக்குமூலங்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2 நாட்கள் ராபர்ட் வதேரா ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்து இருக்கிறார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: