×

பாகிஸ்தானை புகழ்ந்த சவுதி இளவரசரை வரவேற்பதா? மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமான நிலையத்திற்கு சென்று கட்டியணைத்து வரவேற்பதா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.சவுதி அரேபிய நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு முறைப்பயணமாக சென்றிருந்தார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து முக்கிய பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிபிஆர்எப் வீரர்கள் கொல்லப்பட்ட சில தினங்களில் சவுதி இளவரசர் இந்தியாவுக்கு பயணமாக நேற்று முன்தினம் இரவு வந்தார். அப்போது அவரை விமான நிலையத்திற்கே சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பக்கத்தில், சவுதி இளவரசரை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். 

மேலும் தனது பதிவில் அவர், ‘பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை புகழ்ந்துள்ள சவுதி அரேபிய இளவரசர், அந்த நாட்டுக்கு ரூ.1.44 லட்சம் கோடியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளீர்கள் இதுதான் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களை நீங்கள் (மோடி) நினைவுகூரும் முறையா? ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐநா.வை இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவானவரை கட்டியணைப்பதா?’ என கூறியுள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prince ,Saudi ,Modi ,Congress ,Pakistan , Pakistan, Saudi prince, Modi, Congress, condemned
× RELATED மன்னர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து இளவரசிக்கும் புற்றுநோய்