அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி: தேர்தல் கூட்டணி வேறு கொள்கை கூட்டணி வேறு

மதுரை: தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என ராமதாஸ் கூறி உள்ளார். தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் முதல்வரும், துணை முதல்வரும் நல்ல முடிவை எடுத்துள்ளனர். வெற்றியை நோக்கிதான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கட்சியை வளர்க்க பல்வேறு கருத்துக்கள் பேசப்படும். சாணக்கியம், சாதுர்யமான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: