யானை மிதித்து முதியவர் பலி

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மடம் சென்போஸ் இருளர் காலனியை சேர்ந்தவர் ஜடையன் (75). இவர் நேற்று மாலை 3 மணி அளவில், ஒகேனக்கல் வனப்பகுதி ஒருத்திப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தேன் எடுக்க சென்றார். அப்போது, மரத்தின் அருகே ஒற்றை யானை நின்றிருந்ததை  கவனிக்காமல் ஏற முயன்றார். இதனால்  ஆவேசமடைந்த யானை, ஜடையனை துரத்திபிடித்து துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. அவரது அலறலை கேட்டு விறகு சேகரிக்க வந்திருந்த கிராம மக்கள், கூட்டமாக சத்தம்போட்டதால் யானை அங்கிருந்து சென்று விட்டது. அதற்குள் ஜடையன் இறந்து விட்டார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: