×

கொடநாடு கொலை வழக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண்

ஊட்டி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பிடிவாரன்ட்  பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட மனோஜ்சாமி ஊட்டி கோர்ட்டில்  நேற்று சரணடைந்தார்.கொடநாடு கொலை மற்றும்  கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில்  தொடர்புடைய 10 பேரும் ஜாமீன் பெற்று மாதம் தோறும் கோர்ட்டில் ஆஜராகி  வந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக  கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர்  முதல்வர் எடப்பாடி  பழனிசாமி பற்றி பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் இருவரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி  ஊட்டி கோர்ட்டில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி வடமலை அவர்கள் இருவர் உள்ளிட்ட 10 பேரையும் கோர்ட்டில் ஆஜராக  உத்தர

விட்டார்.


ஆனால், அப்போது ஆஜராகாத சயான், வாளையார் மனோஜ், திபு, பிஜின்குட்டி ஆகியோருக்கு பிடிவாரன்ட்  பிறப்பித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிஜின்குட்டி,  திபு  இருவரையும் தமிழக போலீசார் கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் கைது  செய்து கோவை சிறையில் அடைத்தனர். சயான்,  வாளையார்மனோஜ் இருவரையும் தேடி வந்தனர். அவர்கள்  வெளிநாடு தப்பி செல்லாதவாறு ‘லூக்அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 18ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆஜராகாத மனோஜ்சாமிக்கு நீதிபதி வடமலை பிடிவாரன்ட்  பிறப்பித்தார். அதன்படி போலீசார் அவரை  தேடி வந்தனர். இந்ந்ிலையில் நேற்று ஊட்டி கோர்ட்டில் நீதிபதி வடமலை முன்  மனோஜ்சாமி சரண் அடைந்தார். பின் அவரை கைது செய்த போலீசார் கோவை மத்திய  சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அன்றைய தினம் மனோஜ்சாமி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக நீதிபதி  உத்தரவிட்டார். மேலும் சயான் மற்றும் வாளையார் மனோஜ்  இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,court , Kodanad murder case, Pvyvardt, Manojsami
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை