ஆம்பூர் காடுகளில் 2வது நாளாக நக்சல் தேடுதல் வேட்டை

ஆம்பூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி மற்றும் பைரப்பள்ளி கிராமத்தை ஒட்டி துருகம் காப்புக்காடுகள் உள்ளது. இங்கு சிறப்பு இலக்கு படையினர் (எஸ்டிஎப்), நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் இளவரசன் தலைமையில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையை துவக்கினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டை நேற்று 2வது நாளாக ஊட்டல் தேவஸ்தானம் தொடங்கி தூலால எர்ரகுண்ட, ஜேலார்பண்ட, சேஷவன் கிணறு, சாணி தொம்மக்குட்டை, தவக்களை குண்டு, சின்னபோடி பண்டை, பெரியபோடி பண்டை, ஆம்பூரான் பண்டை, ஜெல்தி வழியாக கொத்தூர் கனவாய் வரை நடந்தது. இந்த வேட்டையில் யாரும் பிடிபடவில்லை.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: