அதிமுக -பாமக கூட்டணி குரங்கு யார்? பூமாலை யார்?: ராமதாஸ் விளக்க கனிமொழி எம்பி கோரிக்கை

சென்னை: அதிமுக ஆட்சி குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று மிகவும் கடுமையாக விமர்சித்த பாமக மீண்டும் அவர்களுடன் கூட்டணி சேர்ந்திருப்பது கேலிக்கூத்தான செயல். இதில் யார் குரங்கு? யார் பூமாலை என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். திமுக எம்பி கனிமொழி, டெல்லியில் இருந்து நேற்று  சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக, பாஜ கூட்டணியில் எத்தனை கட்சிகள் இணைந்தாலும் சரி, எந்த கட்சி இணைந்தாலும் சரி, அதனால் திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.  எங்களுடைய கூட்டணி பலம் வாய்ந்தது. மக்கள் ஆதரவை பெற்றது. ஏற்கனவே குரங்கு கையில் உள்ள பூமாலை என கடந்தகால அதிமுக கூட்டணியை பாமக விமர்சித்துள்ளது. தற்போது, அதே பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

எனவே இப்போது, யார் பூமாலை, யார் குரங்கு என்பதை அவர்கள்தான் முடிவு செய்து விளக்கவேண்டும். திராவிட கட்சிகள் மீதும், ஜெயலலிதா மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த பாமக, தற்போது திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்பதை மக்கள் தான் கேள்வி எழுப்ப வேண்டும்.  வலுவான கூட்டணி என்பது கட்சிகளின் எண்ணிக்கையால் மட்டும் வந்துவிடாது. மக்கள் ஆதரவு, உள்ள கட்சிகள் எத்தனை என்பது தான் முக்கியம் தற்போது திமுக - காங்கிரஸ் இடையில் தொகுதி உடன்பாடு சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்துள்ளது திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் நடந்து முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: