ஓசூர் தொகுதி காலியாக உள்ளது என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி கடிதம்

சென்னை: ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் வந்து எளிதாக ஓட்டு அளித்துவிட்டு செல்ல சாய்தள வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, மின்சார வசதிகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும். சக்கர நாற்காலி அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நவீன ஓட்டுப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. வாய்பேச முடியாத, காது கேட்காதவர்களுக்கு சைகை மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

தலைமை செயலகத்தில் இருந்தபடி மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமும் இன்று (நேற்று) வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினேன். ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தப்படும். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், விழிப்புணர்வு குறும்படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதில் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இடம்பெறுவார்கள். வரும் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சில மொபைல் ஆப் (செயலி) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை தெரிந்து கொள்ளவும், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பற்றி புகார் அளிக்கவும் vigil app அறிமுகப்படுத்தப்படும். அதேபோன்று அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வாங்க suvitha app மற்றும் பிரசாரத்துக்கு அனுமதி பெற sugam app அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது விரைவில் நடைமுறைக்கு வரும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தென்மண்டலத்தை சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பாளர்கள் 400 பேருக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து இன்று மறைமறைநகர் நகரில் உள்ள ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். தென்மண்டலத்தை சேர்ந்த 400 பேருக்கு நாளை (22ம் தேதி) பயிற்சி அளிக்கப்படும். இங்கு பயிற்சி பெற்றவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். தமிழகத்தில் உள்ள ஓசூர் தொகுதி காலியாக உள்ளது என தமிழக சட்டப்பேரவை செயலாளரின் கடிதம் கிடைத்த உடன், அந்த தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது. வருகிற 23 மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மற்றும் நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். வருகிற 23 மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மற்றும் நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: