முதுகில் பாய்ந்து ஒடிந்தது தொழிலாளி நுரையீரலில் புகுந்த கத்தி பாதுகாப்பாக அகற்றம்: நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்

நெல்லை: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உடலில் கத்திக்குத்து பட்டது. இதில் நுரையீரல் பகுதியில் புகுந்து ஒடிந்து நின்ற கத்தியை நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பாதுகாப்பாக அகற்றினர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் கண்ணன் அளித்த ேபட்டி: குமரி மாவட்டம் அழகப்பபுரத்தை அடுத்த புன்னார்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (36). அச்சக ஊழியர். இவர் கடந்த மாதம் 28ம் தேதி நெஞ்சில் கத்திக்குத்து ஏற்பட்டு கத்தி உள்ளேயே ஒடிந்து நின்ற நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுகு பகுதியில் பாய்ந்த கத்தி நுரையீரலை காயப்படுத்தி இதயம் மற்றும் பெரிய ரத்த நாளங்களுக்கு மிக அருகில் இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரது உடலில் இருந்த ஒடிந்த கத்தி பாகத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த 6ம் தேதி மார்பக திறப்பு அறுவை சிகிச்சை செய்து முதுகுப்புறம் புகுந்து ஒடிந்து நின்ற 8 சென்டிமீட்டர் அளவிலான உடைந்த கத்தி பாகத்தை டாக்டர்கள் கவனமாக அகற்றினர். சுமார் 2 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் மார்வின் பெய்லிஸ் தலைமையிலான குழுவினர் இதனை வெற்றிகரமாக செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் பாண்டித்துரை குணமடைந்துள்ளதால் அவரை டிஸ்சார்ஜ் ெசய்கிறோம்.  முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக இச்சிகிச்சை செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: