மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கு முருகன், கருப்பசாமி ஜாமீனில் வந்தனர்: பொய் வழக்கை சந்திப்பதாக பேட்டி

மதுரை: கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தனர். அப்ேபாது முருகன், ‘என் மீது போடப்பட்ட பொய் வழக்கை சந்திப்பேன்’ என தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முருகன், கருப்பசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருவருக்கும் கடந்த 12ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வழக்கு நடைபெறும் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு ஜாமீன் உத்தரவு நகல் கிடைக்காததால் இருவரும் விடுவிக்கப்படவில்லை.

நேற்றுமுன்தினம் ஜாமீன் தொடர்பான ஆவணங்கள், உச்சநீதிமன்ற உத்தரவு நகல் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதி (பொ) சாய்பிரியா, இருவரையும் ஜாமீனில் விட அனுமதி வழங்கினார். உத்தரவு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்ெகாண்டு இருவரது தரப்பில் ஆஜரான வக்கீல் நேற்று காலை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார். அவர், சிறைத்துறை அதிகாரிகளிடம் ஜாமீன் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் நேற்று காலை 7 மணியளவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதை சட்டரீதியாக சந்திப்பேன். சிறையில் சித்ரவதை எதுவும் செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், விரிவாக பேச முடியாது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: