அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் ஒசகோட்டையில் தூக்கிட்டு தற்கொலை : வீடியோவை வைத்து சடலத்தை கண்டுபிடித்த நண்பர்

பெங்களூரு : அமெரிக்காவை சேர்ந்தவர் பெங்களூரு அடுத்த ஒசகோட்டையில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீடியோ ஆதாரங்களை வைத்த சடலத்தை கண்டுபிடித்ததாக அவரின் நண்பர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்கோட் தவுல்பி (45). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பெங்களூரு வந்திருந்தார். சுற்றுலா விசாவில் வந்ததாக கூறப்படுகிறது. இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு உதவியாக பெங்களூருவை சேர்ந்த கணேஷ் என்பவர் இருந்துள்ளார். எங்கு சென்றாலும் இருவரும்தான் வெளியே சென்றவர் வருவார்கள். இந்நிலையில் கடந்த பிப்.10ம் தேதி தவுல்பி திடீரென்று மாயமானார். எப்பொழுது கணேஷிடம் தான் அவர் கூறிவிட்டு செல்வார். ஆனால் இந்த முறை அவர் எதுவும் கூறவில்லை. சந்தேகம் அடைந்த கணேஷ் அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வழக்கமாக செல்லும் இடங்களுக்கு சென்று விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு ஊரக மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு சென்ற அவர் தவுல்பி மாயமானதாக புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். மற்றொரு புறம் கணேசும் அவர் தரப்பிற்கு தவுல்பியை தேடினார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணேஷிற்கு சமூக வலைத்தளம் வாயிலாக ஒரு வீடியோ கிடைத்தது. அதில் தவுல்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும் அதற்கு முன்னதாக அவர் வீடியோவில் பேசியும் இருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேஷ் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, தனது சொந்த முயற்சியில் அவரை தேட தொடங்கினார்.

பல்வேறு நூணுக்கங்கள் தெரிந்த அவர் இன்ஸ்டாகிராம் உதவியுடன் அவர் எந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதை அடையாளம் காண தொடங்கினர். அதன்படி இன்ஸ்டாகிராமில் தவுல்பி, ஒசகோட்டை அடுத்த ஆவலஹள்ளி பகுதியில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர் போலீசார் உதவியுடன் சடலத்தை கைப்பற்றினார். தற்கொலை செய்து பல நாட்கள் ஆகியதால் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் காரணம் என்ன வென்பது தெரியவில்லை. இருப்பினும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் பதிவிட்ட செல்பி வீடியோவை போலீசார் பரிசீலனை செய்தனர். அதில் அவர் வாழ்வில் விரக்தியடைந்திருப்பதாகவும், வாழ்க்கை சுமையாக இருப்பதாக கூறியிருந்துள்ளார். குடும்பத்தினரை விட்டு பிரிவது கடினமாக இருந்தாலும், இந்த துயர முடிவை தேடி கொள்வதாக கூறியிருந்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னதாக பல முறை தற்கொலை செய்து கொள்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து வேண்டுமென்றே அந்த தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உறுதி செய்த போலீசார் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக உதவியுடன் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பெங்களூரு வருவதற்கு முன்னதாக போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பின்னர், அதை கணேஷிடம் ஒப்படைத்தனர். அவர் குடும்பத்தினரிடம் அந்த சடலத்தை ஒப்படைத்துள்ளார். இந்த தற்கொலை குறித்து ஆவலஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: