திருமண வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணமோசடி : தொழில் அதிபர் போல் நடித்த வாலிபர் கைது

புதுடெல்லி: திருமண வலைதளங்களில், தொழிலதிபர் போல் தன்னை அறிமுகம் செய்தி, பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மோகன் கார்டன் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது: திருமண வலைதளத்தில் வரன் தேடுவதற்காக குறிப்பிட்ட தளத்தில் விண்ணப்பித்திருந்தேன். எனது விவரங்களை பார்த்து, தொடர்பு கொண்ட அசோக் குமார் என்பவர், தன்னை தொழிலதிபர் என அறிமுகப்படுத்தியதோடு ஆண்டு வருமானம் 1 கோடி, பங்களாக்கள் மற்றும் கார்கள் உள்ளன என ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதனை நம்பிய நான் அவரிடம் பேசி வந்தேன்.

இந்த நிலையில் நாங்கள் பழகிய சில நாட்களில் அவசர தேவைக்காக 5,000 அனுப்பி வைக்கும்படி கூறினார். அவர்மேல் உள்ள நம்பிக்கையில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினேன். ஆனால் அதன்பின் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

என்னை ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு அதில் கூறினார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், அவனை தேடி வந்தனர். அப்போது திருமண வலைதளத்தில் அறிமுகமான மற்றொரு தோழியை சந்திக்க அவர் ஜெய்பூர் சென்றது தெரிந்தது. எனினும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், பத்பர்கஞ்சில் நேற்றுமுன்தினம் அவரை கைது செய்தனர். விசாரணையில், பெண்களிடம் மோசடி செய்தவன் டேராடூனை சேர்ந்த ஆஷிஷ் குக்ரேதி(27) என தெரிந்தது. தொழிலதிபர் அசோக் வெர்மாவின் முகநூல் விவரங்களை சேகரித்து போலி திருமண வலைத்தள பக்கத்தை உருவாக்கி பெண் தேடி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: