×

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி தொகுதியும் அடங்கும். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல்வாஸ்னிக், வேணுகோபால், கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். பின்னர் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டனர்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளிக்கையில்: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். மேலும் திமுகவுடன் இணைந்து 2 ஆண்டில் போராட்டத்தில் பங்கேற்ற காட்சிகளை அழைத்து பேசுவோம் என  ஸ்டாலின் கூறினார். கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளித்த பின்னர் மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடும். நாங்கள் ஓட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிப்படையாக கூட்டணி குறித்து அறிவித்துள்ளோம் என அவர் தெரிவித்தார். மேலும் எந்தெந்த தொகுதிகள் என்பது கூட்டணி கட்சிகளுடன் அழைத்து முடிவு செய்து அறிவிக்கப்படும். அதிமுக கூட்டணியை மக்கள் பண நல கூட்டணி என கூறுகின்றனர். தேமுதிகவுடன் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டாலினை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டில் முழுதிருப்தி அடைந்தோம். காங்கிரஸ் - திமுக இடையேயான கூட்டணி நீண்ட நாள் கூட்டணி என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று வேணுகோபால் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என வேணுகோபால் கூறினார்.


நாராயணசாமி கருத்து:
திருக-காங்கிரஸ் கூட்டணி மிகவும் பலமான கூட்டணி என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,DMK ,elections ,alliance , 10 seats,Congress , DMK alliance, parliamentary elections
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...