அனுமதிசீட்டு ஸ்கேன் ஆகாததால் அரசு பஸ் மூன்றரை மணி நேரம் நிறுத்தி வைப்பு: நாங்குநேரி டோல்கேட்டில் பரபரப்பு

நாங்குநேரி: சுங்க கட்டணம் செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டதால் கன்னியாகுமரி செல்லும் அரசுநாங்குநேரி டோல்கேட்டில் 3.30  மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மாற்று வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஊட்டி-கன்னியாகுமரி இடையே பஸ் இயக்கப்படுகிறது. இதற்கான டோல்கேட் கட்டணம், குறிப்பிட்ட வங்கியில் செலுத்தப்பட்டு பார்கோடுடன் கூடிய அடையாள ஸ்டிக்கர் அந்தந்த பஸ்களின் முகப்பில் ஒட்டப்பட்டு உள்ளன. டோல்கேட்டை கடந்து செல்லும்போது பார்கேடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அனுமதி சீட்டு ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு ஊட்டியில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. டிரைவராக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த பொன்முத்து(34) என்பவரும், நடத்துனராக நெல்லை மாவட்டம் வி.கே.புதூரை சேர்ந்த முத்துகணேஷ்(47) என்பவரும் பணியில் இருந்தனர்.

கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட டோல்கேட்களை கடந்து நெல்லை வழியாக நாங்குநேரி டோல்கேட்டிற்கு காலை 6.30க்கு அரசு பஸ் வந்தது. அப்போது டோல்கேட் ஊழியர்கள்,  ஸ்கேனர் கருவிமூலம் பார்கேடு ஸ்டிக்கர் மீது ஸகேனர் செய்து கட்டணம் வசூலிக்க முயன்றனர்.

ஆனால் அனுமதி ஸ்டிக்கர், ஸ்கேன் ஆகவில்லை. ஊழியர்கள் பலமுறை முயற்சி செய்தும் ஸ்கேன் ஆகாததால் தானியங்கி லாக், கதவு திறக்கப்படவில்லை. இதனால் அரசு பஸ்சை, டோல்கேட்டில் இருந் து வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்பட்

டது. இதுதொடர்பாக டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோர் டெப்போ மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், டோல்கேட் கட்டணம், மொத்தமாக குறிப்பிட்ட வங்கியில் செலுத்தப்பட்டு விட்டதாகவும், தொடர்ந்து மேலும் கட்டணம் செலுத்த வேண்டாம், மீறி கட்டினால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது என கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் டோல்கேட் ஊழியர்கள், பார்கேடு ஸ்டிக்கர் ஸ்கேன் ஆனால் தான் தானியங்கி லாக் திறக்கும் என்பதால் மாற்றுஏற்பாடாக டோல் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவித்தனர். இதனால் டோல்ஊழியர்கள் மற்றும் டிரைவர், நடத்துனர் ஆகியோர் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த சுமார் 12 பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து பயணிகள் 12 பேரும் மாற்று வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். தகவல் அறிந்து நாங்குநேரி போலீசார் சென்று  டோல்கேட் ஊழியர்கள், அரசு பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதுபோல் கன்னியாகுமரி  அரசு பணிமனை மேலாளரும், தொடர்புகொண்டு விளக்கம் அளித்தார். இதையடுத்து சுமார் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் அரசு, டோல்கேட்டில் இருந்து விடுவிக்கப் பட்டது. இந்த சம்பவம் அரசுபோக்குவரத்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: