ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு : மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி அறிவிப்பு

டெல்லி : ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரிக்கான ஜிஎஸ்டியை மறு ஆய்வு செய்யும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது. டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் அவகாசம் 20ம் தேதியில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கு வரும் 28ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கட்டுமானத்தில் இருக்கும் வீடுகள் மற்றும் லாட்டரிக்கு ஜிஎஸ்டியை குறைப்பது தொடர்பாக காணொலியில் அல்லாமல் நேரடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று சில மாநிலங்கள் கேட்டு கொண்டதாக தெரிவித்தார். எனவே அது பற்றி முடிவெடுக்க வரும் 24ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் ஜெட்லி குறிப்பிட்டார்.  

மாநில அரசு நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் லாட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனிடையே லாட்டரிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட மகாராஷ்திரா மாநில நிதி அமைச்சர் சுதிர் முங்கண்டிவார்  உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கொண்ட குழு லாட்டரிகளுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளித்தது.  இவற்றுக்கு ஒரே ஜிஎஸ்டியை விதிப்பது தொடர்பாக வரும் 24ம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: