காஷ்மீரில் ராணுவ வீரர்களின் வாகன இயக்க விதிகளில் மாற்றம்!

ஸ்ரீநகர் : ராணுவ வீரர்கள் செல்லும் வாகனங்களின் இயக்க விதிகளில் இன்று மத்திய அரசு அதிரடியாக மாற்றம் கொண்டு வந்துள்ளது. ராணுவ வாகனங்கள் செல்லும் போது அவ்வழியாக மற்ற வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறைக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சையத்தின் ஆட்சி காலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது பொதுமக்களை ஒடுக்கும் நடவடிக்கை என்றும், மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்போதைய முப்தி முகம்மதின் கூட்டணி கட்சியும், மத்தியில் ஆட்சி செய்த கட்சியுமான காங்கிரஸ் இந்த விதிகளை மாற்ற ஒப்புதல் அளித்தது. இதன் பிறகு ராணுவ வாகனங்கள் செல்லும் போது அந்த வாகனத்துடன் மற்ற வாகனங்களும் செல்லலாம் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த பிப்., 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த போது சுமார் 350 கிலோ வெடி பொருட்கள் அடங்கிய காரில் வந்த தீவிரவாதி வீரர்களின் வாகனத்தில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  ராணுவ வீரர்கள் வாகனங்கள் செல்லும் வழியில் மற்ற தனிநபர்களின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற வாகனங்கள் செல்லும் பாதை மூடப்பட்டு. ராணுவ வாகனங்கள் சென்ற பிறகே, அவ்வழியாக மற்ற வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ராணுவ வாகனங்கள் செல்லும் பாதையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அவர்கள் சென்ற பிறகே போக்குவரத்து தொடங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: