இந்திய மண்ணில் பாகிஸ்தான் பயங்கரம் தொடர்பான ஆதாரங்களை அமெரிக்காவிற்கு தர இந்தியா முடிவு

டெல்லி : பாகிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவிற்கு ஏவப்படும் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களை அமெரிக்காவிடம் இந்தியா வழங்க உள்ளது. புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை படை தாக்குதல் நடைபெற்ற நிலையில், ஜப்பான் உள்ளிட்ட 25 நாடுகளை தொடர்பு கொண்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் புல்வாமா சம்பவத்திலும் போதிய ஆதாரம் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தெரிவித்துள்ளார். சீனாவும் அதையே கூறுகிறது. இதற்கு முன் தரப்பட்ட ஆவணங்களின் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத நிலையில், சர்வதேச அளவில் அழுத்தம் தர இந்தியா முடிவு எடுத்துள்ளது. இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஆவணங்களை தர இந்தியா முடிவு எடுத்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ வர்தன் உடனும் இன்று காலை ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் பாகிஸ்தானை சர்வதேச நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியை இந்தியா தூதரக ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் மோடி தெரிவித்த நிலையில் இந்த ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.

பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிசாரியா இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, இந்தியா - பாகிஸ்தான் உறவுகளை பற்றி விவாதித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் பிசாரியா, இந்தியாவின் தூதர்கள் அனைவரும் மற்ற நாடுகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், இது தவிர தன்னால் வேறு எதுவும் கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: