புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூஸிலாந்து நாடளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

வெல்லிங்டன் :புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூஸிலாந்து நாடளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதலில் 44 வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதி அருகே, விடுமுறைக்கு பின்னர் பணிக்கு திரும்பிய வீரர்கள், இரண்டாயிரத்து 500 பேர், 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் 350 கிலோ வெடிமருந்துகள் அடங்கிய ஸ்கார்பியோ வாகனத்தை, வீரர்கள் வந்த பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார். இந்த கொடூர சம்பவம் நடந்ததும், பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த வீரர்களும்,  பின்னால் வந்து கொண்டிருந்த வீரர்களும் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், அவர்களின் மீதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் வீரர்கள் நிலை குலைந்தனர். இதில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கணடனம் தெரிவித்து வருகின்றன.

நியூஸிலாந்து நாடளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

இந்த சூழலில் நியூசிலாந்தில் இன்று நாடளுமன்றம் கூடியதும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய துணை பிரதமர் பீட்டர்ஸ் , பயங்கரவாதத்தால் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என தெரிவித்தார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் இந்தியர்களுக்கும் நியூசிலாந்து மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்வதாகவும் பீட்டர்ஸ் பேசினார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவிற்கு தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவித்து கொள்வதாகவும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில் அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: