×

இந்தியா-சவுதி அரேபியா இடையே 4 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லி : அரசு முறை பயணமாக இந்தியா வந்த சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இளவரசர் முகமது பின் சல்மானுக்கு விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா - சவுதி அரேபியா இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா - சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு, சுற்றுலா, முதலீடு உள்ளிட்டவை தொடர்பான 5 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.

இந்தியாவின் மதிப்புமிக்க முக்கிய கூட்டாளி சவுதி அரேபியா என்றும் இந்தியாவின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு சவுதி அரேபியா முதலீடு செய்வதை வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் நன்மைகள் குறித்து பேசியதாகவும், இருநாட்டு உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இந்த சந்திப்பு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகள் கை கொடுக்க வேண்டும் எனவும், பயங்கரவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை புல்வாமா தாக்குதல் உலகிற்கு காட்டியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த 70 ஆண்டுகளில் சவுதி அரேபியாவின் கட்டமைப்பில் இந்தியர்கள் பெரும் பங்கெடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்திய மக்கள் அனைவரும் தங்களின் நண்பர்கள் என்றும், பிரதமர் மோடி தனது மூத்த சகோதரர் என்றும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து செயல்பட சவுதி தயக்கம் காட்டாது என்றும் இந்தியாவுடன் உளவுத் தகவல்களையும் பகிர்ந்துகொள்ள சவுதி தயாராக உள்ளதாகவும் சவுதி இளவரசர் தகவல் அளித்துள்ளார். இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 11.50 மணிக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saudi Arabia ,India , India, Saudi Arabia, Prince Mohammad bin Salman, Modi
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...